Homeசெய்திகள்தமிழ்நாடுதருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி

தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி

-

தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி

தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பலி

மாரண்ட அள்ளி அருகே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஐந்து காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. அவற்றை வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், காளி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில், வனவிலங்குகள் நுழையாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியாகின. உயிர் தப்பிய இரண்டு குட்டி யானைகள், இறந்த யானைகளைச் சுற்றி சுற்றி வந்தன. தகவல் அறிந்து, பாலக்கோடு வனத்துறையினர் யானைகளின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவை பெண் யானைகள் எனத் தெரியவந்துள்ளது.

யானைகள் நடமாடும் இடத்தில் மின் வேலி அமைக்கப்பட்டிருப்பதை, வனத்துறையினர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து, மின்வேலி அமைத்த பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

MUST READ