இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1-7-2024 முதல் “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம் 2023” என மாற்றப்பட்டு, இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
ராமேஸ்வரத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நாடாளுமன்றத்தில், முறையான எந்த விவாதங்கள் இல்லாமலும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் இந்த சட்டங்கள் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்று அறிவிக்கப்பட வேண்டும். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியிருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக 4 வாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும்,“ என தெரிவித்தனர்.