Homeசெய்திகள்தமிழ்நாடுகூடலூரில் கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

கூடலூரில் கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

-

- Advertisement -
kadalkanni

தேனி மாவட்டம் கூடலூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சாவினால் தயார் செய்யப்பட்ட ஆயில் விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் காவல்துறையினர் குமுளி செல்லும் கேரள நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு உரிய விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது

அதில் அவர்கள் கஞ்சா எண்ணெய் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான  ஒரு கிலோ  கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்த போலிசார், அவற்றை தயாரித்து விற்பனை செய்த கூடலூர் நகர் பகுதியை சேர்ந்த நடராஜன், பிரபு மற்றும் லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ராஜு ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ