Homeசெய்திகள்தமிழ்நாடுகடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு

கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு

-

கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இலங்கையைச் சார்ந்த பைபர் படகு ஒன்று நிற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
File Photo

இதையடுத்து உடனடியாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் படகில் சென்று அங்கு நின்ற இலங்கை பைபர் படகை கைப்பற்றி அதில் இருந்த 3 பேரையும் ஆறுகட்டுறை கடற் பகுதிக்கு கொண்டு வந்தனர். மூன்று பேரையும் காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த ரீகன்,சிவக்குமார்,
அற்புதராஜ் ஸ்ரீகாந்தன் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் மீன்பிடிக்க வந்த போது படகு இஞ்சின் பழுதால் கடந்த 4 நாட்களாக கடலில் தத்தளித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இலங்கைச் சேர்ந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து இவர்கள் மீனவர்களா? கஞ்சா கடத்துவதற்காக தமிழகம் வந்தார்களா? அல்லது கடற் கொள்ளையர்களா ? என பல்வேறு கோணங்களில் வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ