சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே ஏரியில் மூழ்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை பகுதியை சேர்ந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகியோர் இன்று துணிகளை துவைப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு ஏரியில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட கிராமத்தினர் உடனடியாக நங்கவள்ளி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரேவதி, சிவஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகிய 3 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஏரியில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.