35 காவல்துறை டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்!
35 காவல்துறை டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.பி.க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், அடையாறு உதவி காவல் ஆணையராக இருந்த நெல்சன், தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் டி.எஸ்.பி. ஆக இருந்த இளங்கோவன், சென்னை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சூறாவளியாய் 300 கோடி வசூலை நெருங்கும் ‘சலார்’…. லேட்டஸ்ட் அப்டேட்!
ஆவடி- பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம், வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராகவும், தாம்பரம் சேலையூர் உதவி ஆணையராக இருந்த முருகேசன், சென்னை அடையாறு காவல் உதவி ஆணையராகவும், தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன், சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மோகன், கடலூர் திட்டக்குடி டி.எஸ்.பி. ஆகவும், சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிருஷணன் ஜெயசிங், தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.