Homeசெய்திகள்தமிழ்நாடு"4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

 

கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!
File Photo

தமிழகத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஏப்ரல் 26- ஆம் தேதி முதல் ஏப்ரல் 29- ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி வரை 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஏப்ரல் 25- ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் (ஏப்ரல் 23), நாளையும் (ஏப்ரல் 24) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” என எச்சரித்துள்ளது.

கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!

தமிழகத்தில் சுட்டெரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும், இளநீர், நுங்கு, தர்பூசணி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ