Homeசெய்திகள்தமிழ்நாடுசிக்கிம் வாகன விபத்தில் தமிழக ராணுவ வீரர் உள்பட 4 பேர் மரணம்

சிக்கிம் வாகன விபத்தில் தமிழக ராணுவ வீரர் உள்பட 4 பேர் மரணம்

-

சிக்கிம் மாநிலத்தில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வத்திராயிருப்பை சேர்ந்த தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

மேற்குவங்க மாநிலம் பின்னாகுரியில் இருந்து சிக்கிம் மாநிலம் பாக்யோங் பகுதிக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பாக்யோங் அருகே ரெனோக் – ரோங்லி நெடுஞ்சாலையில் சென்றபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சுபேதார் தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 ராணுவ விரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தங்கபாண்டியனும் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன்(41), கடந்த 2004 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார்.அவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 6 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். விபத்தில் தங்கபாண்டியன் உயிரிழந்த செய்தியை அறிந்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

MUST READ