Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை எச்சரிக்கை: 4 பல்கலை. மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு..

கனமழை எச்சரிக்கை: 4 பல்கலை. மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு..

-

- Advertisement -
கனமழை எச்சரிக்கை: 4 பல்கலை. மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு..
கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறி இலங்கை கடற்கரை வழியாக தமிழ்நாடு நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் உருவாக உள்ளதை ஒட்டி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. அத்துடன் தமிழகத்தில் இன்றும் ஓரிரு இடங்களளில் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பல்கலைக்கழங்களில் இன்று ( நவ.27) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக்கழகம்

=> பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

=>சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

=>இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைப்பு. மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம்

=> இன்று (நவ.27) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

=>காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

MUST READ