Homeசெய்திகள்தமிழ்நாடு"40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்ல பணியாற்றுக"- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல்!

“40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்ல பணியாற்றுக”- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல்!

-

- Advertisement -

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, அ.தி.மு.க.வினர் செயலாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு, தகுதியற்றவர்கள் நீக்கம்!

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மடல் எழுதியுள்ளார். அதில், கடந்த 29 மாத கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவுக் கொடுத்து மக்களின் வாழ்வைத் துயர்மிகுந்ததாக மாற்றி விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மின் கட்டணம், பால் விலை உயர்வு என மக்கள் சொல்லொணாத் துயரில் தி.மு.க. அரசு ஆழ்த்தி வருகிறது. கள்ளச்சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. ஒரு குடும்பம் தமிழ்நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்களை நம்பி அ.தி.மு.க. தேர்தலைச் சந்திக்கவுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது என்ற வெற்றிச் செய்திக்காக அ.தி.மு.க. பாடுபட வேண்டும். நாடாளுமன்ற வெற்றிச் செய்தியே தமிழ்நாட்டை தீய சக்திகளிடமிருந்து மீட்கும் முழக்கம். அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழாவில், ஆளுமைத் திறனற்ற ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை எழுதிட உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ