தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணை
அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்படுகின்றன. காமராஜர் காலத்தில் கட்டிய பள்ளிக் கட்டடங்களில் பழுதடைந்த கட்டடங்கள் செப்பனிடப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் 8,500 பள்ளிகளில் ரூபாய் 190 கோடியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
ஐந்து புறநகர் ரயில் சேவைகள் ரத்து!
அதைத் தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “தமிழகம் முழுவதும் 48 கோயில்களில் புதிய தேர்கள் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. 128 கோயில்களில் மரத்தேர் கொட்டகைகளை அமைக்க ரூபாய் 46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீ வைகுண்டம் வீரபாண்டீஸ்வரர் கோயிலில் மார்ச் 05- ஆம் தேதி பாலாலயம் நடைபெறவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.