Homeசெய்திகள்தமிழ்நாடு5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

-

- Advertisement -

 

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
File Photo

வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஐந்து மாவட்டங்களில் உள்ள ஆற்றங்கரையோரம் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!

தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையின் மொத்த உயரமான 71 அடியில் 66.01 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பாயும் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆற்றில் இறங்கிக் குளிக்க வேண்டாம் என்றும், ஆற்றை கடக்கவோ, முயற்சி செய்யவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..

இதனிடையே, தேனி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MUST READ