நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐந்து வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரோபோஜி ராஜான் போதை பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்கில் சம்பந்தபட்டுள்ளதால் அவரை வழக்கறிஞராக பணி செய்ய தடை விதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பால சுப்பிரமணியம், சமூக வலைதளத்தில் சார் பதிவாளர் குறித்து அவதூறு பரப்பியதாக அவரை வழக்கறிஞராக பணி செய்ய தடை விதிக்கபட்டுள்ளது.
மேலும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர் செல்வம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் அசோக் குமார், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய விஜயகமலன் ஆகியோர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இந்த மூவரையும் வழக்கறிஞராக பணி செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்