Homeசெய்திகள்தமிழ்நாடு50 கிலோ எடைக் கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய கல்லூரி மாணவி!

50 கிலோ எடைக் கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய கல்லூரி மாணவி!

-

 

50 கிலோ எடைக் கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய கல்லூரி மாணவி!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்

விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. அத்தகைய பொங்கல் பண்டிகையை பாரம்பரியம் மாறாமல், சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடினர் கல்லூரி மாணவர்கள்.

நெல்லை மாவட்டம், தனியார் மகளிர் கல்லூரியில் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில், வர்ஷா என்ற மாணவி 50 கிலோ எடைக்கொண்ட இளவட்டக்கல்லைத் தூக்கி மாணவிகள் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள், கல்லூரி வளாகத்தில் கோதுமை, அரிசி உள்ளிட்ட நவதானியங்கள் மற்றும் வண்ண வண்ண பூக்களால் கோலமிட்டு பொங்கலைக் கொண்டாடினர்.

கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்…. தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!

இதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையில் வேட்டி, சட்டைகள் மற்றும் பட்டுப்பாவாடைகளை அணிந்து, ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கல் வைத்தும், பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடியும், நடனமாடியும் கொண்டாடினர்.

MUST READ