- Advertisement -
மாணவ மாணவியருக்கு சுட சுட பரிமாறப்படும் நடிகர் விஜய்யின் மதிய விருந்து
![விஜய்யின் கல்வி விருது விழாவில் 5000 பேருக்கு சுட சுட மதிய உணவு](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/vijs.jpg)
“தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா” வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு நடிகர் விஜய் பொன்னாடை போர்த்தி, 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் வெற்றி சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேருக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர் அவர்களுக்கு சுட மதிய விருந்து தொடர்ந்து பரிமாறப்பட்டு வருகிறது.
ஒருபுறம் மாணவர்களுக்கு உதவித் தொகையையும் வெற்றி சான்றிதழ்களையும் நடிகர் விஜய் வழங்கி வர அதைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்களுக்கு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்தி செல்கின்றனர். அவர்களுக்கு மதிய உணவாக
- ஜம் ஜம் ஸ்வீட்
- மாங்காய் ஊறுகாய்
- இஞ்சி புளி புதினா துவையல்
- தயிர் பச்சடி
- கதம்ப பருப்பு பொறியல்
- உருளை பட்டாணி வறுவல்
- சவ் சவ் கூட்டு
- காளிஃபிளவர் பக்கோடா
- வெஜ் புலாவ்
- கத்தரிக்காய் காரக்குழம்பு
- மாங்காய் முருங்கை சாம்பார்
- தக்காளி ரசம்
- ஆனியன் வடை
- அப்பளம்
- பாயாசம்
- மோர் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது.