Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு

அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு

-

- Advertisement -

அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு

தமிழ்நாட்டில் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 53 லட்சத்து 48 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு

 

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வரை மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 53 லட்சத்து 48,663 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் 24,63,081 ஆண்களும், பெண்கள் 28,85,301 பேரும், 281 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு

அவர்களே 45 முதல் 60 வரை 2,47,811 பேர் உள்ளதாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7,810 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,50,018 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

MUST READ