Homeசெய்திகள்தமிழ்நாடு562 நியாய விலைக்கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்!

562 நியாய விலைக்கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்!

-

 

562 நியாய விலைக்கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்!
Video Crop Image

நியாய விலைக்கடைகளில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரில் இந்த சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.

அரசுக்கு எதிராக தொழிலாளர்களிடம் கோஷங்களை எழுப்பி வரும் மாவோயிஸ்ட்டுகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் பணம் வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மொத்தம் உள்ள 588 நியாய விலைக்கடைகளில் 562 கடைகளில் தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘மொபைல் முத்தமா’ என்ற விழிப்புணர்வு வாசகங்கள் நியாய விலைக்கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன.

மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

விரைவில் மாநிலம் முழுவதும் யுபிஐ பரிவர்த்தனைச் சேவை விரிவுப்படுத்தப்படவுள்ளது.

MUST READ