Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்'- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

“தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்’- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

-

 

"தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்'- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!
Video Crop Image

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை வந்த குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

பின்னர், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடி பேர், பெண்கள் 3.10 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 18,016 பேர் உள்ளனர். சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். 17 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தால், 18 வயது நிரம்பியதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் உதவிக்கான மொபைல் செயலி மூலம் தங்கள் பெயர்களை வாக்காளர்கள் சேர்க்கலாம். வரும் நவம்பர் 04, 05, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!

வரும் ஜனவரி 05- ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ