Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!

-

 

தமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!
File Photo

கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 6 முதல் 12- ஆம் வகுப்புகள் தொடங்கிய நிலையில், 1 முதல் 5- ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29- ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 1- ஆம் தேதி 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கும், ஜூன் 5- ஆம் தேதி 1 முதல் 5- ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெப்பத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 7- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கத்திரி வெயில் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே, 6 முதல் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை மாணவர்களைப் பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும். பழைய பயண அட்டையைக் காண்பித்தால் மாணவ்ர்களை பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

“டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்”- பந்து வீச்சாளர் அஸ்வின் ட்வீட்!

சீருடையில் வந்தாலோ, அடையாள அட்டையைக் காண்பித்தாலோ மாணவர்களை பேருந்தில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ