Homeசெய்திகள்தமிழ்நாடுஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 60 சவரன் தங்க நகை , பணம்...

ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 60 சவரன் தங்க நகை , பணம் திருட்டு

-

வேலூரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் (BDO) வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 60 சவரன் தங்க நகை கொள்ளை பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 60 சவரன் தங்க நகை , பணம் திருட்டுவேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த மேட்டு இடயாம்பட்டி சாலை M.K நகர் பகுதியில் வசிப்பவர் சாலமன். இவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்( BDO), வேலூரில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவருடைய மகள் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கரையும் உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து பாகாய காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொள்ளை நடந்த இடத்தில் மோப்ப நாய் உதவியோடு கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் வெர்ஷனில் ‘முபாஸா தி லயன் கிங்’ படத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபல இளம் நடிகர்!

MUST READ