மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!
இது தொடர்பாக, அனைத்து அரசு, தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!
அதேபோல், 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் விடுதி, தேர்வு உள்ளிட்ட எந்த கட்டணமும் வாங்கக் கூடாது. இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். ஒதுக்கீட்டில் சேரும் மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலித்தால் சம்மந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளது.