Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்.... நேரில் சென்று...

அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்…. நேரில் சென்று பாராட்டிய எம்.பி.!

-

 

அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்.... நேரில் சென்று பாராட்டிய எம்.பி.!

மதுரையில் அரசுப் பள்ளிக்கு ஏழு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய பெண்ணை மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?

மதுரை மாவட்டம், ஒத்தக்கடையை அடுத்த கிழக்கு கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உக்கரப்பாண்டியனின் மனைவி பூரணம், வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.

அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்.... நேரில் சென்று பாராட்டிய எம்.பி.!

இந்த தகவலை அறிந்த மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பூரணம் அம்மாள் பணிபுரியும் வங்கிக்கு நேரில் சென்று பாராட்டினார்.

வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!

இது குறித்து பேசிய பூரணம் அம்மாள், தனது மகளின் நினைவாக, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், அந்த பள்ளியில் குழந்தைகள் படித்து பெரிய அதிகாரிகளாக வர வேண்டும். அந்த இடத்தில் பெரிய கட்டடம் கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

MUST READ