தமிழகத்தில் இன்று (மே 05) முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று (மே 05) முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி காரைக்காலில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
வரும் மே 07- ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் மே 08- ஆம் தேதி கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் மே 07- ஆம் தேதி முதல் மே 09- ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 டிகிரி வரை குறையக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.