தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
‘லியோ’ பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!
அதன்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு முதன்மைச் செயலாளராக இருந்த அபூர்வா, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை, உழவர் நலத்துறைச் செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“கோயில் பெயரால் வனம் குப்பைக்காடாகிறது”- நீதிபதி கருத்து!
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை ஆணையராக ஜெகநாதன், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா, அச்சு மற்றும் எழுத்துப்பொருள் அச்சுத்துறை ஆணையராக சோபனா, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.