Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

-

- Advertisement -

ஏஏஒய் -பிஹெச்ஹெச் வகைகளைச் சேர்ந்த ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மாநில அரசு இலவச அரிசியை வழங்கி வருகிறது. தற்போது வரை என்பிஹெச் கார்டு அவர்களுக்கு ஈ கே ஒய் சி சரிபார்ப்பு தேவை இல்லை.

கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் - எம்எல்ஏ அசோகன்

பிப்ரவரி முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அவருடைய துறை அதிகாரிகளுக்கு சிவில் சப்ளையர்ஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனர் மோகன் வெளியிட்ட சுற்றறிக்கையில்” ஈ கேஒய்சி பயிற்சியை முடிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 மத்திய அரசு நிர்ணயத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற யோசனை இருப்பதால் இந்த விஷயத்தில் நெகிழ்வுத் தன்மை இருக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டிய போதிலும் மாநிலத்தின் சிவில் சப்ளை அதிகாரிகள் காலக்கடுவை நீடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்”என்று கூறப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சமீபகாலமாக நியாயங்களை கடைகளில் ஊழியர்கள் விடுபட்ட பயனாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடைகளுக்கு சென்று செயல்முறைகளை முடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

புதுப்பிக்கப்படுவது ஏன்?
தேசிய உணவு பாதுகாப்பு உறுதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமானவர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். அவர்களுக்குத்தான் அந்த பொருட்கள் செல்கிறதா என்பதை உறுதி செய்ய சுய விவரத்தை e-KYC மூலம் மார்ச் 31ஆம் தேதிக்கு புதுப்பித்துக்கொள்ள கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 70 லட்சம் பேர் அப்படி தங்கள் ரேஷன் கார்டுகளை இதுவரை புதுப்பிக்கவில்லை.இதனால் அந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்கு அவர்கள் மீண்டும் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள வருகிற மார்ச் 31 வரை மத்திய அரசு வாய்ப்பளித்துள்ளது.


இதுவரை புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மாநில வாரியாக அதிகாரப்பூர்வ ரேஷன் கார்டு அல்லது பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) போர்டலுக்கு செல்லவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட ‘கோர்சிடென்சியல்’ கணக்கை பயன்படுத்தி உள்நுழையவும். அல்லது உங்கள் மொபைல் எண்ணில் அல்லது மின்னஞ்சல் ஐடி போன்ற அடிப்படை விவரங்களை வழங்குவதன் மூலம் ஒரு கணக்கு உருவாக்கவும்.

முகப்பு பக்கத்தில் ரேஷன் கார்டு சேவைகள் அளவு விவரங்களை புதுப்பித்தல் பிரிவில் பொதுவாக காணப்படும் ஈகேஒய்சி பிரிவுக்கு செல்லவும். குடும்பத் தலைவர் அல்லது ரேஷன் கார்டுதாரருடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை உள்ளிட்டு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) அனுப்பப்படும். உங்கள் ஆதாரை சரி பார்க்க போர்டலில் ஓடிபியை உள்ளிடவும். வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு உங்கள் ஈகேஒய்சி புதுப்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக நீங்கள் ஒப்புதலை சேமிக்கலாம் அல்லது ஸ்க்ரீன் ஷாட்டை எடுக்கலாம்” என அந்த அறிவிப்பில் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

MUST READ