Homeசெய்திகள்தமிழ்நாடுராகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட்

ராகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட்

-

- Advertisement -

ராகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட்

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் விடுதியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Ragging

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 6000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் மூன்றாம் ஆண்டு பயிலும் சீனியர் மாணவர்கள் செய்யச் சொன்ன பணியை முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்கள் செய்யாததால் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேக்கிங் செய்து சாட்டை கயிறு சாட்டையடி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் விடுதியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்த 8 மாணவர்கள் கல்லூரியில் இருந்து ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர் கலைவாணி அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.

 

MUST READ