Homeசெய்திகள்தமிழ்நாடுஎட்டாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் உயிரிழப்பு!

எட்டாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் உயிரிழப்பு!

-

 

எட்டாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் உயிரிழப்பு!
File Photo

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. அங்குள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 8- ம் வகுப்புப் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேகலாவுக்கு காய்ச்சல் வந்ததை அடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பிறகு வீடு திரும்பினார்.

காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்

எனினும், நேற்று (நவ.0) மேகலாவுக்கு மீண்டும் காய்ச்சல் வந்ததுடன், தொடர்ந்து வாந்தியும் வந்துள்ளது. இதனையடுத்து, காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேகலாவை அவரது பெற்றோர் கொண்டுச் சென்றனர்.

அங்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று (நவ.05) நள்ளிரவு மேகலா உயிரிழந்தார். மாணவிக்கு எந்த மாதிரியான நோய் தாக்கம் செய்யப்பட்டது எனக் கண்டறியும் முன்பே, அவர் உயிரிழந்தார்.

டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!

ஆய்வு முடிவுக்கு பின்னரே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ