எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து 13ம் தேதி புதன்கிழமை காலை 241 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனனர். இந்திய எல்லை கடற்பரப்பில் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி செந்தில் (46) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு (எண் TN08 MM 214) மற்றும் அதில் சென்ற அருண்(36), மருது (42), சுந்தரம் (35), செல்வராஜ் (38) ஆகிய 4 மீனவர்களும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு (எண் TN16 MM 2046) மற்றும் அதில் சென்ற கேசவன் (32), குமார் (38), முத்து (43), குணா (20), முருகேசன் (45) ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை முகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 9-பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.