Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

-

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

fishermen

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து ஒன்பது மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் வருகின்ற எட்டாம் தேதி அதாவது இன்று வரை மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் சிறை காவல் தேதி முடிந்து இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதில் ஒன்பது மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
File Photo

இதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ