தொடங்கப்பட்ட முதல் நாளே மூடு விழா கண்ட பிரியாணி கடை
திறப்புவிழா சலுகை அறிவித்த பிரியாணி கடைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியரால் வேலூர் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று திறப்பு விழாவை முன்னிட்டு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பிரியாணியை வாங்க குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர், மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராமல் விற்றதாக கூறி கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை காவல்துறையினரை வைத்து வெளியேற்றியுள்ளார்.
இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வன்மையாக கண்டிப்பதோடு பிரியாணி கடைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.