Homeசெய்திகள்தமிழ்நாடுடவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

-

பதினைந்து அடி உயர் டவரில் ஏறி 12 வயது சிறுவன் செய்த யோகாசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

 

கோவையில் 15 அடி உயரத்தில் நின்றபடி ஹஸ்த கோணாசனத்தில் ஏழு நிமிடங்கள் இருபது விநாடிகள் தொடர்ந்து நின்றபடி உலக சாதனை செய்து 12 வயது சிறுவன் யூனியன் உலக சாதனையில் இடம் பிடித்தார்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சரண்யா மகன் சர்வஜித் நாராயணன். 12 வயதான இவர் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயது முதலே யோகாவில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன், யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனை ஏராளமான சாதனைகளை செய்துள்ளார்.

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

 

சர்வஜித் தற்போது 15 அடி உயரத்தில் யோகாவில் புதிய உலக சாதனை செய்துள்ளார். 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட டவர் மீது ஏறிய சர்வஜித், அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து ஏழு நிமிடங்கள் 20 விநாடிகள் நின்று யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

இதற்கான நிகழ்வில் ரஷ்ய நாட்டில் இருந்து வந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் சிறுவன் சர்வஜித் நாராயணின் சாதனையை நேரடியாக கண்காணித்தார். தொடர்ந்து சிறுவனின் சாதனையை அங்கீகரித்த அவர், வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

MUST READ