ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த 19.09.2023 அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்ததலைவர் ஹெச்.ராஜா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களையும் அவதூறாக பேசியதோடு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காளையார் கோவில் மக்களிடையே இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் மோதல் போக்கை உருவாக்கும் எண்ணத்தோடு பேசியதாக காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியசாமி காளையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆய்வாளர் பாஜக மூத்த தலைவர் H.ராஜா மீது IPC 153,A, 294, 295,A, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்ற எண் *377/23* ல் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.