Homeசெய்திகள்தமிழ்நாடுபல் பிடுங்கிய விவகாரம்- இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி

பல் பிடுங்கிய விவகாரம்- இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி

-

- Advertisement -

பல் பிடுங்கிய விவகாரம்- இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி

பல் பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ்ஹ்குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி குற்றாலம் காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மீது சிபிசிஐடி போலீசார் பல் பிடுங்கிய புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் மணவாளகுறிச்சி வட்டத்தின் ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உளவுப்பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதி மார்த்தாண்டம் காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

MUST READ