Homeசெய்திகள்தமிழ்நாடுமின்கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

-

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுவதுமாக ரத்துசெய்ய வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திமுக – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்த இந்த அழைப்பை ஏற்றுபுதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதேபோல் குபேர் அங்காடி, நேரு வீதி, அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, காமராஜ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் தங்களது கடைகளை முழுவதுமாக அடைத்து  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் முக்கிய கடைவீதிகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல் புதுச்சேரி திரையரங்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்பு காரணமாக ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மின்கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மறைமலையடிகள் சாலை, காமராஜ் சிலை சந்திப்பு, உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

MUST READ