Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

-

- Advertisement -

 

அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பொறுப்பாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி, கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், நாமக்கல், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். தொடரில் இருந்து சாம்பா விலகல்!

கிருஷ்ணகிரி தொகுதிக்கு கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, அசோக்குமார் ஆகியோரும், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தம்பிதுரை, முக்கூர் சுப்பிரமணியன், கே.சி.வீரமணி, அப்பு, வேலழகன் ஆகியோரும், அரக்கோணம் தொகுதிக்கு கே.சி.வீரமணி, கோ.அரி, அரக்கோணம் ரவி, சுகுமார் ஆகியோரும், திண்டுக்கல் தொகுதிக்கு திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும், திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ