இரவில் திடீர் என கொழுந்துவிட்டு எரிந்த வேன் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சென்னை கொரட்டூர் அருகே உள்ள 200 அடி சாலையில் பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மினிவேன் மாதனாங்குப்பம் பகுதியில் திடீர் என தீ பிடித்து எரியத் துவங்கியது.
பின்னர் கொரட்டூர் காவல் துறையினர் மூலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்தனர். இதில் அதிஷ்ட வசமாக ஒட்டுனருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கொரட்டூர் காவல் துறையினர் எஞ்சின் கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.