Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே  பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து...

ஆவடி அருகே  பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

-

- Advertisement -

பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் தீ மள மளவென கடை முழுவதும் பரவியது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முழுவதுமாய் அனைத்தனர் தீயணைப்பு துறையினா். ஆவடி அருகே  பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

ஆவடி ,திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் பிரபல காதிம்ஸ் காலணி  ஷோரூம் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று கடையை  மூடிவிட்டு சென்ற நிலையில் திடீரென இன்று அதிகாலை  கடையின் முன் பகுதியில் தீ எரிவதைக் கண்டு சாலையில் செல்பவர்கள் ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த ஆவடி,அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் தீ மள மளவென கடை முழுவதும் பரவியது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீய முழுவதுமாக அணைத்தனர். இதில் கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்புள்ள செருப்பு வகைகள்,ஷூ வகைகள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. விபத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு எதேனும் சதியா என்ற கோணத்தில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து – கொண்டாடிய கிராம பொதுமக்கள்

MUST READ