Homeசெய்திகள்தமிழ்நாடுதற்கொலை செய்த மகன் -தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்

தற்கொலை செய்த மகன் -தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்

-

மனஅழுத்த பிரச்சனையால் தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி, மல்லிகுந்தம், ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் அன்புராஜ்(22). இவர் சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீஸாக பணியாற்றி வந்தார்.

தற்கொலை செய்த மகன் -தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் இந்நிலையில் இந்த மாதம் விடுமுறை எடுத்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் திடீரென விஷத்தை குடித்து விட்டார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து மேச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவரது வீட்டை சோதித்து பார்த்தபோது அன்புராஜ் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது.

அதில் அவர் எழுதியிருந்ததாவது ,”போறேன் மா நான் இத்தனை நாட்களாக உனக்காகத்தான் வாழ்ந்தேன் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல இதை எப்படியும் யாராவது உனக்கு படிச்சி காட்டுவாங்க நான் யாருகிட்டயும் சொல்லாமல் போகனுன்னுதான் நெனச்சேன் ஆனா எல்லாரும் தப்பா பேசுவாங்கனு தான் உங்கிட்ட சொல்லுறேன் நான் யார்க்கும் கெடுதல் பண்ணல, என் தலைக்குள்ள ஏதோ ஓடிட்டே இருக்கு, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல, வெளிய எங்கேயும் போக மாட்டேன் மா .உன்கூடவே தான் இருப்பேன். அதனால தான் வீட்டுக்கு வந்தேன்”,என எழுதியுள்ளார். இதை கைப்பற்றிய போலீஸார் அன்புராஜிக்கு மனஅழுத்த பிரச்சனை இருந்ததா ?என்று விசாரித்து வருகின்றனர்.

MUST READ