Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக முதல் பெண் நகர்மன்ற தலைவரின் தலைக்கு மேல் தொங்கிய கத்தி... பதவி தப்பியது எப்படி..?

திமுக முதல் பெண் நகர்மன்ற தலைவரின் தலைக்கு மேல் தொங்கிய கத்தி… பதவி தப்பியது எப்படி..?

-

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, சிபிஐ 2, காங்கிரஸ் 1 என மொத்தம் 24 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுக சார்பில்  20 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாத்திமா பஷீரா  நகரத்தின் முதல் பெண் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக சிபிஐயை சேர்ந்த சுதர்சன் உள்ளார்.

திமுக முதல் பெண் நகர்மன்ற தலைவரின் தலைக்கு மேல் தொங்கிய கத்தி... பதவி தப்பியது எப்படி..?இந்த நிலையில், திமுக மற்றும் சிபிஐயை சேர்ந்த  கவுன்சிலர்கள்  நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா மீது  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக  நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதியிடம் அண்மையில் தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.

திமுக முதல் பெண் நகர்மன்ற தலைவரின் தலைக்கு மேல் தொங்கிய கத்தி... பதவி தப்பியது எப்படி..?இதையடுத்து, வரும் 19ம் தேதி நகர்மன்ற தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்திருந்த நிலையில் நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றனர். பின்னர் மீண்டும் திமுகவை சேர்ந்த நகர் மன்ற தலைவராக பாத்திமா பஷீரா பணியை தொடரலாம் நகர் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

MUST READ