விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை நடைபெறும் வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம்!
இது குறித்து தமிழக நிதித்துறை, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும், உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது.
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?
கயல் வடிவில் கண்களும், அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும், 2.15 செ.மீ அகலமும், 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப் பெற்ற, இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.