மோக்கா புயல் உருவானது. இன்று இரவு இந்த புயல் தீவிரமடைந்து நாளை மிக தீவிரமான புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்று உருவாகி இருக்கும் மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 14ஆம் தேதி காலையில் வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது . நேற்று காலையில் இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது . அதன் பின்னர் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக வலுப்பெற்று இருக்கிறது . இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டிருக்கிறது .
இன்றைய தினம் இரவு இந்த புயல் தீவிரமடையும். நாளை மிகத் தீவிரமடைந்து வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது . வரும் 14ஆம் தேதி இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே காலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொண்டு வடக்கு நோக்கி இந்த புயல் நகர்ந்து செல்கின்றது. இதனால் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.