புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் புதியரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை வேண்டுமென சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சமீபத்தில் நடைமுறைக்கு வந்த கலைஞர் மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் மாதந்தோறும் 1000 ருபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டதை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.