Homeசெய்திகள்தமிழ்நாடுகங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம்... நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

-

- Advertisement -

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைய உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மன்னர் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவில், தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த ஆவணமாக விளங்கி வருகிறது. இக்கோவிலை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ள வலைதள பதிவில், பழந்தமிழர் பெருமைக்கு சான்றான கீழடி, பொருநை அருங்காட்சியகங்களுக்கு இணையாக, கங்கையும், கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனின் தலைநகரமாம் கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ரூ.22 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் துறையின் கீழ் புதிய அருங்காட்சியகம் அமையப் பெறவுள்ளது, என தெரிவித்துள்ளார்.

MUST READ