Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டுப்பாளையத்தில் காலைக்கடன் கழிக்க சென்றவர் காட்டுயானை மிதித்து பலி!

மேட்டுப்பாளையத்தில் காலைக்கடன் கழிக்க சென்றவர் காட்டுயானை மிதித்து பலி!

-

- Advertisement -

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அருகே காலைக்கடனை கழிக்க சென்ற முதியவர் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக பலி – சம்பவ இடத்தில் வனத்துறையினர்,போலீசார் விசாரணை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையை அடுத்துள்ள நீலாம்பதி பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதனால் வனவிலங்கு நடமாட்டம் என்பது இருக்கும்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சாடி என்பவரது மகன் பொன்னுச்சாமி(50) என்பவர் இன்று காலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் காலை கடனை கழிக்க சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள புதர் பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை ஆக்ரோஷமாக துரத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் காலைக்கடன் கழிக்க சென்றவர் காட்டுயானை மிதித்து பலி!வயது முதிர்வின் காரணமாக அவரால் ஓட இயலவில்லை. இருந்தும் யானை அவரை விடாமல் துரத்தி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலைக்கடனை கழிக்க சென்ற முதியவர் ஒற்றைக்காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ