Homeசெய்திகள்தமிழ்நாடுபாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை  நடத்த திட்டம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை  நடத்த திட்டம்

-

- Advertisement -

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி புதிய, பழைய ரயில் பாலங்களை திறந்து கப்பலை வைத்து சோதனை நடத்த திட்டம்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை  நடத்த திட்டம்பிரதமர் மோடி அவர்கள் பாலத்தை திறந்து வைக்க வந்தால் சாலை பாலத்தில் மேடை அமைத்து அதன் மேல் நின்று திறந்து வைப்பது போல டெமோ நடத்தப்போகும் ரயில்வே துறை.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் புதிய ரயில் பாலங்கள் கட்டுமானங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்கியும் மற்றும் புதிய மற்றும் பழைய ரயில் பாலங்களைத் திறந்து அதன் வழியாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலை இயக்கியும் சோதனை நடத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பாரத பிரதமர் மோடி அவர்கள் வருகை தந்தால் சாலை பாலத்தில் நின்று திறந்து வைப்பதற்காக மேடைகள் அமைக்கப்பட்டு டெமோ நடத்தவும் ரயில்வே துறை அதிகாரிகள் திட்டமிட்டு சாலை பாலத்தில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.

MUST READ