விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்.ஒரு மணி நேரத்துக்கு மேலாக ட்ரெயின் வழியில் இருப்பதால் பயணிகள் அவதி தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6.00 மணிக்கு 1000க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரயில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரெனஅதிகப்படியான சத்தம் கேட்டதால் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
பாண்டிச்சேரி ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது . ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனா், ஒரு மணி நேரத்திற்கு மேலாகயும் தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்ய தாமதமானது. அப்போது திண்டிவனம் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது. இன்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால தாமதமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – அமைச்சர் கே என்.நேரு