Homeசெய்திகள்தமிழ்நாடுஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

-

- Advertisement -

ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள பெகாட்ரான் போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

செங்கல்பட்டு- ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள பெகாட்ரான் போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீ விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கும் தீயணைப்புப்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரியபடுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயனைப்புதுறை வாகனத்தில் வந்த வீரர்கள் மற்று செங்கல்பட்டு தாலுகா போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் இந்த பகுதியில் புகைமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் அவசர உதவிக்கு இரண்டு 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருந்தனர். தீ விபத்து காரணமாக வெளியில் இருந்து தொழிற்சாலைக்கு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை அதே போல் உள்ள பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களையும் வெளியே அனுப்பவில்லை சுமார் 6 மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்.

மகேந்திராசிட்டி பகுதியில் ஐ போன் தயாரிக்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மகேந்திராசிட்டி, வீராபுரம், பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தொழிற்சாலை முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

MUST READ