ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை
ஆன்லைன் கடன் செயலியால் ஒரே நாளில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். அவர், கிருஷ்ணகிரி சின்ன பெல்லாளம் பகுதியை சேர்ந்த வசந்த் என்பது தெரியவந்துள்ளது. ஆன்லைன் கடன் செயலியில் பெற்று ரூ.1 லட்சம் பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தியடநித அவர், தான் தங்கியிருந்த பள்ளியகரகம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
வசந்த் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது செல்ஃபோன், சிம் கார்டு உள்ளிட்டவற்றை உடைத்து தூக்கி எறிந்துள்ளார். மேலும் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்துவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறு சிறு தொகையாக வீட்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து வசந்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 40க்கும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதற்கான தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஆன்லைன் கடன் செயலி இளைஞர்கள் உயிரை பறித்துவருகிறது. ஆன்லைன் வாயிலாக பணத்தை கடன் தந்து,கந்துவட்டி போல் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இளைஞர்களை திசைதிருப்பி கடைசியில் தற்கொலை தூண்டும் விதமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.