ஏ1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு
சென்னை கோடம்பாக்கத்தில் ஏ1 சைக்கிள் நிறுவன ஊழியர் வீட்டில் வருமான வரிசோதனை நடைபெற்றுவருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர், நண்பர்கள் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏ1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சுந்தர பரிபூரணம் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கு சைக்கிள் விநியோகம் செய்தவராவார். இதேபோல் கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை இன்று காலை நிறைவடைந்தது.