ஆடி அமாவாசை- ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள், புனித நீராடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஆடி அமாவாசை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தங்களது சொந்த கிராமங்கள் மற்றும் பழமையான கோயில்களில் கூடி தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்துள்ளதால் சிறப்பு வாய்ந்ததாக கருதும் பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். ராமேஸ்வரம் கடற்கரையில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. இன்று இரண்டாவது ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்த கோயிலில் மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், சூரிய பகவானை வழிபட்டும் வருகின்றனர்.